டக்வொர்த் முறையில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

டப்ளின்: அயர்லாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறை விதிகளின் படி இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலாஹைடு மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீசியது. பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங் இருவரும் இந்திய அணியில் அறிமுகமாகினர். பால்பிர்னி, கேப்டன் ஸ்டர்லிங் இணைந்து அயர்லாந்து இன்னிங்சை தொடங்கினர். கேப்டன் பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே பால்பிர்னி (4 ரன்), டக்கர் (0) அடுத்தடுத்து வெளியேறினர். அயர்லாந்து 6.3 ஓவரில் 31 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. கேம்பர் – பாரி மெக்கார்தி ஜோடி 7வது விக்கெட்டுக்கு அதிரடியாக 57 ரன் சேர்த்தது.

அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில்மட்டும் அயர்லாந்துக்கு 22 ரன் கிடைக்க, அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன் குவித்தது. பும்ரா, பிரசித், பிஷ்னோய் தலா 2, அர்ஷ்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இந்தியா 6 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி இருந்தது. ஆனால், 7வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்ந்தது. 6.5 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. முதல் பாதியில் அயர்லாந்து ஸ்கோர் 6.5 ஓவரில் 45/2 ஆக இருந்தது. இதனால் மீண்டும் ஆட்டத்தை தொடர முடியாத நிலையில் டக் வொர்த் முறைப்படி இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

பிரசித்திபெற்ற முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கும் சேலைகள் மறு விற்பனை: பக்தர்கள் அதிர்ச்சி

வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்