சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 8 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் பயணித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022ம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளனர். 2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதேபோல், 2019ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020ம் ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021ம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும், கடந்த 2023ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள். 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 25,01,17,072 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், பேடிஎம் மற்றும் போன் பே போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் செயலி மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.