ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை குறைந்த விலையில் மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 29 குழந்தைகள் உள்ளிட்ட 47 நபர்களுக்கு இந்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரத்தவியல் துறை இந்த அறுவை சிகிச்சை வெற்றி சதவீதத்தை அளவிட்டபோது 90 சதவீதமாக இருந்துள்ளது.

நோயாளிகளுக்கு பெரும்பாலான எலும்பு மஜ்ஜை செயலிழப்பு பரம்பரையாக இருக்கும். 27 குழந்தைகளில் குறைந்தது 10 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 7 அல்லது 8 வயது குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை செயலிழப்பு ஏற்படுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.50 லட்சம் முதல் 75 லட்சம் செலவு ஏற்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனையில் குறைந்த செலவில் அதுவும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தால், பின் விளைவுகள் வரும் என சில மக்கள் கவலைகொள்கிறார்கள் ஆனால் இந்த சிகிச்சையில் எங்களது வெற்றி விகிதம் 93 சதவீதமாக உள்ளது. இது உயர்தர சிகிச்சை, ஆனால் அரசின் நடவடிக்கையால் ஏழை மற்றும் தேவைப்படும் நோயாளிகளுக்கு கிடைக்கிறது. எதிர்காலத்தில், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நோயாளிகள் உட்பட தேவை அதிகமாக இருப்பதால், இவ்வசதியை விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம்

வரும் 1ம் தேதி முதல் தென்மாவட்ட ரயில்களின் எண்கள் மாற்றம்: சிறப்பு ரயில்கள் அந்தஸ்தை இழக்கின்றன

முக்கொம்பு கதவணையில் பராமரிப்பு பணி: கொள்ளிடத்தில் 1,200 கன அடி தண்ணீர் திறப்பு