காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கினார். மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்து கூறுகையில், ”காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே கூட்டுறவு சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் உள்ளது.

இதன் நுழைவு வாயிலில் மக்களின் தாகத்தை போக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் முடியும் வரை சுத்தமான குடிநீர் வழங்கப்படும்” என்றார். நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டுறவுத் துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு