மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு இந்து, கிறிஸ்தவர்கள் சீர்வரிசை: 150 கிடா வெட்டி 7,000 பேருக்கு விருந்து

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் மஸ்ஜிதே இலாஹி பள்ளிவாசல் திறப்பு விழா கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், கிராமத்தை சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என கலந்து கொண்டனர். ஊர் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் விழாவை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர். இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்து வந்தனர். இதேபோல, கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர். பின்னர் 150 கிடாக்களை வெட்டி, 7 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் விழா நடந்தது.

* பழனி பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் உதவி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அண்ணாநகரில் பள்ளபட்டி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பழனி பக்தர்களுக்கு பள்ளபட்டி இஸ்லாமியர்கள் அரைலிட்டர் வாட்டர் பாட்டில், ப்ரூட் ஜூஸ், பிஸ்கட் பாக்கெட், கால் வலிக்கான ஆயின்மென்ட் மற்றும் செல்போன் சார்ஜ் செய்வதற்காக பிளக் பாயிண்ட் வசதி, குளிர்ந்த பானையில் மினரல் வாட்டர் வழங்கப்பட்டது.

Related posts

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை பணியிடை நீக்கம்

தாய்ப்பால் விற்ற கடைக்கு சீல் வைப்பு

மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி மாயம்