அறநிலைய துறையில் இ-டெண்டர் அமல்

நெல்லை: இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன் கூறியிருப்பதாவது: 2023 மார்ச் 30ம் நாள், நிதித் துறையின் 93, 94 ஆகிய இரு அரசாணைகளின்படி 2023 ஏப்ரல் 1 முதல் அரசுத் துறையின் மூலம் கோரப்படும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட விதிகளுக்கென சில திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2023 ஏப்ரல் 1 முதல் கோரப்படும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை மின்னணு இணையதளம் மூலம் அரசாணையில் தெரிவித்துள்ள விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த அனைத்து ஒப்பந்தப்புள்ளி கோரும் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிப்பு

டெல்லியில் இன்று மாலை நடக்க உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் மோடியுடன் 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்

தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப்-4 தேர்வு தொடங்கியது!