சான்சிபார்-தான்சானியாவில் சர்வதேச வளாகம் நிறுவுகிறது சென்னை ஐஐடி

சென்னை: சென்னை ஐஐடி, சான்சிபார்-தான்சானியாவில் சர்வதேச வளாகத்தைத் தொடங்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. ஐஐடி மெட்ராஸ்-ன் சான்சிபார் வளாகம் கிழக்குஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் சான்சிபார் தீவில் அமைய உள்ளது. இந்த கல்வி கூட்டுமுயற்சி, தனித்துவம் உடையதாகவும், கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இது இருக்கும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வளாகத்தில் தொடக்க நாட்களில் ஐஐடி மெட்ராஸ் அல்லது இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். உள்ளூரைச் சேர்ந்த திறமையான நபர்களுக்கு பயிற்சி அளித்து நியமிப்பதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. சென்னை ஐஐடியில் ஜூலை 2023ல் தொடங்கவுள்ள பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் தான்சானியா/சான்சிபாரைச் சேர்ந்த குடிமக்களுக்கு இந்திய அரசு ஏராளமான உதவித் தொகைகளை வழங்குகிறது.

Related posts

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை