சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தொழில் முனைவோர் பிரிவு புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையில் 9ம் ஆண்டு தொழில்முனைவோர் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. வருகிற 10ம் தேதி வரை மாநாடு நடைபெற உள்ளது. ஐஎஸ்ஓ, ஸ்டார்ட்அப் இந்தியா, யுனெஸ்கோ சான்றிதழ்களைப் பெற்றுள்ள மாணவர்களால் நடத்தப்படும் இந்த தொழில்முனைவோர் சந்திப்பு இந்தியாவிலேயே முதன்முறையாகும். இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூறுகையில், ‘மாநாட்டை அனைவரும் இலவசமாகப் பார்க்கலாம். 1000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், இந்தியா முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்கள் பங்கேற்கின்றனர்’ என்றார்.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்: அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

கனமழை எச்சரிக்கை.. 2.66 கோடி செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது: பேரிடர் மேலாண்மை துறை தகவல்