நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால்.. முஸ்லிம்கள் அமெரிக்கா வர பயண தடை விதிப்பேன்: டிரம்ப் சர்ச்சை பேச்சு வௌ்ளை மாளிகை கடும் கண்டனம்

வாஷிங்டன்: முஸ்லிம்கள் மீண்டும் பயண தடை விதிக்கப்படும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பேசியது சர்ச்சையை எழுப்பி உள்ளது. அவரது பேச்சுக்கு வௌ்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப், ஈரான், ஏமன், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஈராக் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி யூதகூட்டணியின் வருடாந்திர உச்சி மாநாட்டில் நேற்று பேசிய டிரம்ப், “என் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பயணதடை உங்களுக்கு நினைவுள்ளதா? அமெரிக்காவை கெடுக்க நினைக்கும் மக்கள் அமெரிக்காவுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் முஸ்லிம்களுக்கான பயண தடையை கொண்டு வந்தேன். அது மிகப்பெரிய வெற்றி அடைந்தது. நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கான பயண தடையை மீண்டும் கொண்டு வருவேன்” என்று பேசினார். இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் டிரம்ப்பின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

டிரம்ப்பின் பேச்சுக்கு வௌ்ளை மாளிகை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ் கூறியதாவது, “அரேபிய அமெரிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த பேச்சு அவமானகரமானது. இத்தகைய வெறுப்புணர்வு ஒரு நாட்டுக்கு அழகல்ல. இஸ்லாமாபோபியாவால் பாதிக்கப்பட்ட இதுபோன்ற நபர்களின் பேச்சுக்களை, அதிபர் பைடனை போல, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related posts

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்