ஐசிசி சர்வதேச ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்ஸ்மேன்கள்

துபாய்: ஐசிசி சர்வதேச ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடத்திலும், விராட் கோலி 3வது இடத்திலும் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.

சர்வதேச ஒருநாள் ஆடவர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் வெகு நாட்களாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் சுப்மன் கில் 826 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், கிங் கோலி 791 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 769 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் 760 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் டாப் 10ல் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 699 புள்ளிகளுடன் சிராஜ் 3வது இடத்திலும், 685 புள்ளிகளுடன் பும்ரா 4வது இடத்திலும், குல்தீப் யாதவ் 667 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், 648 புள்ளிகளுடன் முகமது ஷமி 10வது இடத்திலும் உள்ளனர். 741 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேஷவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து