பற்கள் பிடுங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணையை துவக்கினார்

நெல்லை: அம்பையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணையை தொடங்கினார். நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை அம்பை ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் போலீசார் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், அம்பை, கல்லிடைக்குறிச்சி, விகேபுரம் இன்ஸ்பெக்டர்கள் மட்டுமின்றி, தனிப்பிரிவு சப்.இன்ஸ்பெக்டர், காவலர்களும் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.

இந்நிலையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருமான அமுதாவை இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் சென்னையில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகை வந்தடைந்தார். அவரை நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும் வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையையும் ஒப்படைத்தனர். ஆவணங்கள் அனைத்தையும் பெற்று கொண்டதோடு, விசாரணையை தொடங்கினார்.

Related posts

அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்