மனைவியைத் தாக்கிய கணவர் போலீசுக்கு பயந்து தற்கொலை

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40). லாரி டிரைவர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராதாகிருஷ்ணன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவரை சரண்யா கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், மனைவியை அடித்து அவரது தலையை பிடித்து சுவற்றில் இடித்துள்ளார். இதில், மனைவியின் மண்டை உடைந்ததால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன் மனைவி இறந்து விடுவார் என்றும் அதனால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்றும் ராதாகிருஷ்ணன் அச்சமடைந்துள்ளார். இதையடுத்து வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு