ஹோண்டா லிவோ

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஹோண்டா லிவோ பைக்கை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாகன விதிமுறைகளுக்கு ஏற்ப, பழுது ஏற்பட்டால் எச்சரிக்கக் கூடிய தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. துவக்க ஷோரூம் விலையாக டிரம் பிரேக் கொண்டது சுமார் ரூ.78,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக்குடன் கூடியது சுமார் ரூ.82,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள 109.5 சிசி ஏர்கூல்டு பியூயல் இன்ஜெக்ஷன் இன்ஜின், அதிகபட்சமாக 8.5 எச்பி பவரையும், 9.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். செல்ப் ஸ்டார்ட்டிங் வசதி, டேங்க் மற்றும் ஹெட் லாம்ப்பில் புதிய கிராபிக்ஸ்கள், வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டியதை நினைவூட்டும் வசதி, கோம்பி பிரேக், 5 விதமாக மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய சஸ்பென்ஷன் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Related posts

சென்னை அருகே டயர் கிடங்கில் தீ விபத்து..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் ஆலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வின்பாஸ்ட் நிறுவனம்..!!

மற்றொரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு; ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்ஸ் குழு நாளை இந்தியா வருகை