மெடிக்கல் ரெப் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது

மதுரை: மதுரை, கரிமேடு விசுவாசபுரியை சேர்ந்தவர் அஜித் (எ) அஜித்குமார் (32). தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில், விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் வெடித்து சிதறியது. சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அங்கு திரண்டனர். தகவல் அறிந்து, கரிமேடு போலீசார் வந்து, மர்மப்பொருள் வெடித்த வீட்டை பார்வையிட்டனர். போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் துணை கமிஷனர்களும் ஆய்வு செய்தனர். விசாரணையில், அஜித்குமார் அங்கு வாடகைக்கு குடியிருந்து வருவது தெரியவந்தது.

இதற்கிடையே, அஜித்குமார் தலைமறைவாகி விட்டார். போலீசார் கூறுகையில், `‘வெடித்தது நாட்டு வெடிகுண்டு ரகத்தை சேர்ந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெடித்ததால் பொருட்கள் மட்டும் சேதமடைந்துள்ளது. அஜித்குமார் மீது சில வழக்குகள் உள்ளது. குற்றச் சம்பவங்கள் நடத்த நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தாரா என விசாரணை நடத்தி வருகிறோம். வீட்டின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். தலைமறைவான அஜித்குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்’’ என்றனர்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு