ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை துவக்கி வைத்தார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்..!!

சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல் நிலையங்களில் முக்கிய பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணி, இயற்கை பேரிடரின் போது காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு உதவுதல், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் போன்ற பணிகளில் சென்னை பெருநகர காவல் துறையினருக்கு பக்கபலமாக 2,329 ஊர்க்காவல் படையினர் (Home Guards) (ஆண்கள் -2054, பெண்கள் -275)
பணியாற்றி வருகின்றனர்.

மேற்படி ஊர்க்காலல் படையினரின் பணி திறன் மற்றும் உடல் திறனை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 21.04.2023 அன்று நடந்த காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் காவல் மருத்துவமனையில், ஊர்க்காவல் படையினரும் சிகிச்சை பெறும் வசதி விரிவுபடுத்தப்படும்” என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் இது தொடர்பாக 22.02.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் இன்று (01.03.2024) காலை எழும்பூர், காவலர் மருத்துவமனை வளாகத்தில் (Police Hospital Egmore) நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்.சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப கலந்து கொண்டு, சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஊt காவல் படையினருக்கு (Home Guards) எழும்பூர். காவலர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும், ஊர்க்காவல் படையினர் காவல் மருத்துவமணையில் அனைத்து வகையான மருத்துவ உதவிகள் பெற்றுக் கொள்வதுடன், காவல் பல்பொருள் அங்காடியிலும், ஊர்க்காவல் படையினர் பொருட்கள் வாங்குவதற்கும் அனுமதி வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட்டு, அதற்கான அடையாள அட்டை விளரவில் வழங்கப்படும் என காவல் ஆணையாளர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி சரத்கர். இ.கா.ப (தலைமையிடம்) இணை ஆணையாளர் A.கயல்விழி, இ.கா.ப (தலைமையிடம்) எழும்பூர் காவல் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி K.V.மதுபிரசாத். ஊர்க்காவல் படை கூடுதல் ஊரக தளபதி மஞ்சித்சிங், துணை ஆணையாளர்கள் A.மணிவண்ணன் (தலைமையிடம்) இராதாகிருஷ்ணன் (மோட்டார் வாகன பிரிவு) காவல் அதிகாரிகள், ஊர்க்காலல் படை அதிகாரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு