வரும் 16, 25, 26ம் தேதி மதுக்கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: திருவள்ளுவர் தினமான வரும் 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளான வரும் 25ம் தேதி (வியாழக்கிழமை) மற்றும் குடியரசு தினமான வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் ஓட்டல், கிளப் உள்ளிட்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, 3 நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு