இந்துத்துவ கருத்துகளுக்கு எதிரான நூல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சனாதன சக்திகள் மீது நடவடிக்கை: முதல்வருக்கு வைகோ பாராட்டு

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன் எழுதிய இந்துத்துவப் பாசிசம் வேர்களும்-விழுதுகளும் என்ற நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகம் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருக்கிறது. காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து, செந்திலதிபனின் புத்தகங்களை விற்கக் கூடாது என்று மிரட்டி இருக்கின்றனர். அதேபோல, திராவிடர் கழகத்தின் புத்தக அரங்கில் விற்பனையாகி கொண்டிருக்கும் நூல்கள், மே 17 இயக்கத்தின் நிமிர் பதிப்பகத்தின் நூல்ளை காட்சிப்படுத்தக் கூடாது என்று மிரட்டிச் சென்றுள்ளனர். இந்த தகவல் தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இந்துத்துவ சனாதன சக்திகள், வடநாடு போன்ற ஒரு நிலையை உருவாக்க முயன்று வருவதை அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு