தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாமல் தவித்தனர். எனினும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பெய்த மிதமான மழையால், அப்பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது. அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

நடிகர் கவுண்டமணிக்கு எதிராக தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

கங்கை ஆற்றங்கரையில் வழிபாடு நடத்திய பின், பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்: வாரணாசியில் 3வது முறையாக போட்டி!!

சென்னையில் கோடை மழையின் அளவு 99% குறைந்துள்ளது: வானிலை மையம் தகவல்