கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி..!!

துபாய்: கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து ஐக்கிய அமீரக நாடுகளுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. துபாயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. இதனால் நகரம் முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் சாலைகள் ஆறுகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. நேற்றைய தினம் மட்டும் 12 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 100 மிமீ மழையும், 24 மணி நேரத்தில் மொத்தம் 160 மிமீ மழையும் பெய்துள்ளது.

சராசரியாக, துபாயில் ஒரு வருடத்தில் 88.9 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக, துபாய் சர்வதேச விமான நிலையம் நீரில் மிதந்து காட்சியளிக்கிறது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

துபாயில் கனமழையால் 10 விமானங்களின் சேவை ரத்து

துபாயில் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து துபாய், அபுதாபி செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு