வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின் தாகத்தை தீர்க்க நீர்-மோர் பந்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, மக்களின் தாகத்தை தீர்க்க, நீர்-மோர் பந்தல் அமைப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ‘வெப்ப அலை வீசக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர்-மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம். கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி

அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை

சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்டப்பட்டது புதுப்பொலிவு பெறும் தஞ்சாவூர் மணி மண்டபம்