சுகாதார துறையில் காலிப்பணியிடம் நிரப்ப செவிலியர்கள் வலியுறுத்தல்

 

கரூர், ஜூலை 26: கிராம சுகாதார, பகுதி சுகாதார மற்றும் சமூதாய நல செவிலியர் கூட்டமைப்பு சார்பில், காலிப்பணியிடம் நிரப்ப வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.
கரூரில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீட்டுக்கு மாவட்ட துணைத்தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சித்தாரா தனலட்சுமி ஜீவா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார், மகேந்திரன், சிங்கராயர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு பொது, சுகாதார துறையில் பல ஆண்டுகளாக உள்ள காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 1800க்கும் மேற்பட்ட விஎச்என்எஸ் துணை மைய காலியிடங்களை நிபந்தனையின்றி நிரப்ப வேண்டும். சுகாதாரத் துறையில் கடந்த 5 ஆண்டுகள் முடித்த சுகாதார ஆய்வாளர்களுக்கு ஜி1 வழங்குவதைப் போல விஎச்என்களுக்கும் ஜி1 வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை