உடல் நலக் குறைவு காரணமாக கேரளாவில் ராகுல் காந்தியின் பிரசாரம் ரத்து

திருவனந்தபுரம்: திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராகுல் காந்தி கேரளாவில் நேற்று கலந்து கொள்ள இருந்த பிரசாரத்தை ரத்து செய்தார். ராகுல் காந்தி நேற்று கேரளாவில் திருச்சூர், மாவேலிக்கரை, ஆலப்புழா ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இந்தநிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியா கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் அவர் கலந்து கொள்ளவில்லை. உடல் நலக்குறைவு காணமாக ராகுல் காந்தி ஓய்வில் இருப்பதால் இந்தியா கூட்டணியின் பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அதைத்தொடர்ந்து நேற்று கேரளாவில் நடைபெற இருந்த பிரசாரத்தையும் ராகுல் காந்தி ரத்து செய்துள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவர் எம்.எம். ஹசன் தெரிவித்து உள்ளார்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு