ஹவாய் தீவில் காட்டூ தீ: பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மவுய் தீவு பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதால் பலி எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 89 ஆக அதிகரித்து உள்ளது.

பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீ விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி விட்டனர். தற்போது தீ அணைக்கபட்டதால் பொதுமக்கள் ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related posts

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்