வேதாரண்யம் அருகே பனை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: 5 ஆண்டுகளாக வருவாய்த்துறையினர் அலைக்கழிப்பதாக புகார்

நாகை: கஜா புயலில் தயை பறிகொடுத்தவர் 5 ஆண்டுகளாக அலைந்தும் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறி பனை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுததால் பரபரப்பு நிலவியது. நாகை மாவட்டம் வேதாரண்ய தாலுகா பனையங்காட்டை சேர்ந்த ராமசந்திரன் என்பவரது தாய் அம்மாளு அம்மாள் கடந்த 2018ம் ஆண்டு காஜா புயலில் உயிரிழந்தார். தாய் உயிரிழந்த மறுநாளே உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையையும் இராமச்சந்திரன் வாங்கி வைத்திருக்கிறார்.

ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் அரசு அறிவித்த ரூ.10 லட்சம் தொகையை வருவாய் துறையினர் வழங்க மறுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதனை முன்வைத்து தோப்புத்துறை ரயில் நிலையம் அருகில் உள்ள பனைமரத்தில் ஏறி அவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி ராமச்சந்திரனை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு