அன்னையர் தினம் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை: பாலைத் தரும் அன்னையர் வாழ்வு பாலைவனமாகாமல் சோலைவனமாகவும், அணைத்து நம்மை வளர்ப்பவர் வாழ்வு அணைந்து போகாமல், அனைத்தும் கிடைக்கப் பெற்று, பெற்றவளின் மனம்குளிர கற்று, உற்ற துணையாய் முன்னேறி முழு வாழ்வு வாழ்வதே மக்கள் மனித தெய்வங்களாம் அம்மாவிற்கு சொல்லும் வாழ்த்து செலுத்தும் நன்றி. என் அம்மாவை வணங்கி எண்ணற்ற அம்மாக்களுக்கு என் வண்ணமயமான அன்னையர் தின வாழ்த்துக்கள்.

* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: நம்மை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்திய முதற்கடவுளாய், நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்தெடுத்து நல்வழிப்படுத்தும் ஆசானாய், தன்னலமில்லா அன்பின் ஊற்றாய், எப்போதும் நமக்கு உற்ற உறுதுணையாய் நின்று, என்றும் நிகரற்ற உறவாக விளங்கும் தியாக உள்ளம் நிறைந்த அனைத்து அன்னையருக்கும், இனிய அன்னையர் தினம் நல்வாழ்த்துகள்.

* பாமக நிறுவனர் ராமதாஸ்: அன்னையர்களின்றி நாம் இல்லை. இந்த அடிப்படை உண்மையை மனதில் கொண்டு, எந்நாளும் அவர்களை வணங்குவோம், போற்றுவோம்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக ஒருங்கிணைப்பாளர்): தனித்துவம் பெற்ற அன்பை, யாருடனும் ஒப்பிட முடியாத, அளவிட முடியாத அன்பை கற்பனை செய்ய முடியாத பாசத்தை அள்ளித் தரும் தாயின் தன்னலமற்ற தியாகத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தின நாளில் அனைத்து தாய்மார்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள்.

* பாமக தலைவர் அன்புமணி: உலகின் அனைத்து மனிதர்களுக்கும் முதல் கடவுள் அவர்களின் அன்னை தான். ஆக்கவும் காக்கவும் மட்டுமே தெரிந்த, அழிக்கத் தெரியாத கடவுள் அன்னை மட்டும் தான். அவர்களின் ஈகத்தை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அடைக்க முடியாது.

* சசிகலா : அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. தாய்மையே நம்மை மனிதராக்குகிறது. மனிதத்தை விதைக்கிறது. வாழும் கடவுளாக திகழும் தாய்மார்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். டிடிவி தினகரன்: எல்லா உயிர்களிடத்தும் நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கும் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு நெஞ்சார்ந்த அன்னையர் தின வாழ்த்து.

 

Related posts

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது

சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது