‘சாக்கடையில் நனைத்தால் சந்தோஷம் நிலவும்’மாமன்-மைத்துனர் மாறி, மாறி துடைப்பத்தால் அடிக்கும் விழா: ஆண்டிபட்டி அருகே விநோதம்

ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில், சாக்கடையில் நனைத்த துடைப்பத்தை கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்வு நடைபெற்றது.‌
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா 3 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3 நாள் நடக்கும் இந்த விழாவில், முதல் 2 நாட்கள் பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பொதுவாக கோயில் திருவிழாக்களில் கடைசி நாளில் கிராம மக்கள் தங்களின் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடுவார்கள்.

ஆனால் மறவப்பட்டி கிராமத்தில் விழாவின் கடைசி நாளான நேற்று மாமன், மைத்துனர்கள், ஒருவரை ஒருவர் சாக்கடையில் நனைத்த துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்வு நடந்தது. மேலும் சிலர் சேற்றில் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கி கொண்டனர். இதை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். துடைப்பத்தை சாக்கடையில் நனைத்து தாக்கிக்கொள்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நீண்டநாள் பிரிந்த வாழும் உறவுகள் ேசரும் என அப்பகுதி மக்கள் நம்புவதாக கூறுகின்றனர்.

Related posts

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்

கேரளாவில் 3 நாட்கள் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து