சுப்மன் கில், விஜய் சங்கர் விளாசல்: கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி..!

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் முதலில் கொல்கத்தா அணி களமிறங்கியது. இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

குஜராத் தரப்பில் அந்த அணியின் முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி; 17.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்