லாரி மோதி காவலாளி பலி

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த லிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (61). இவர், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியாக ஒரகடம் நோக்கி சைக்கிளில் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, வாரணவாசி அருகே பின்னால் வந்த கனரக லாரி, சைக்கிள் மீது மோதியதில் கணேசன் தூக்கி வீசப்பட்டார். தலை மற்றும் உடம்பில் பலத்த காயமடைந்த கணேசனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி

இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்கவில்லை: தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா