பசுமை உணவகத்தில் பெண்களுக்கு தடை: ஆப்கானில் தலிபான்கள் உத்தரவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெண்கள், மாணவிகளுக்கு எதிரான கடுமையான தடைகள் விதிக்கப்படுகின்றன. அதனால் அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆப்கானுக்கான சில உதவிகளையும் மறுத்து வருகின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பூங்காக்கள், பசுமையான உணவகங்களுக்குள் குடும்பத்துடன் பெண்கள் வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

இதுபோன்ற இடங்களில் இரு பாலின மக்களும் நெருக்கமாக பழகுவதாக மத குருமார்கள் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாலின கலப்பு, பெண்கள் ஹிஜாப் அணியாமல் செல்வதால், இந்த தடைகள் கொண்டு வரப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தடை உத்தரவானது, ஹெராத் மாகாணத்தில் அமைந்துள்ள பசுமை உணவகங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன உதவி மேலாளர் மீது தாக்குதல்: பின்னணி பாடகர் வேல்முருகனிடம் போலீஸ் விசாரணை

திண்டுக்கல்லில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்வு!

10ம் வகுப்பு மாணவி கடத்தி சிறை வைப்பு: வாலிபர்களுக்கு வலை