தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மேலும் குறைக்க அரசு திட்டம்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மேலும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழாவில் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மது விற்பனையை ஒழுங்குபடுத்த, பிரச்சனைகளை களைய கருத்து கேட்கிறேன். ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் வரும் அதே நேரத்தில் விமர்சனங்களும் வருகின்றன. டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது திட்டமில்லை.

ஏற்கனவே 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மது அருந்துபவர்கள் தவறான இடத்திற்கு செல்லக் கூடாது என்பதற்காக விற்பனை இலக்கு கண்காணிக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படவில்லை. கூடுதல் விலைக்கு மது விற்பனை என புகார் வந்தால் உடனுக்குடன் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் அமர்ந்து வேலை செய்வதற்கு கூட இடம் இல்லாத நிலை உள்ளது இவ்வாறு கூறினார்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது