மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி கவர்னர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி கவர்னர், அமைச்சர்கள் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏ இரா.மூர்த்தி, துணை மேயர் மகேஷ்குமார், ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் சுப்பிரமணியன், இயக்குநர் மோகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பதிவில், ‘மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts

20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் நாளை தொடக்கம்: 27 நாட்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம் : இணை இயக்குனர் விசாரணை!!