அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு

சென்னை:அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க அகில இந்திய தலைவர் கே.கணேசன், மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் 26ம் தேதி அன்று நடைபெறவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் 2 லட்சத்து 44 ஆயிரம் அலுவலக உதவியாளர்கள், இரவுக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், பண்ணை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் தூய்மை பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், பொது நூலகத்துறை, கல்வித்துறை போன்ற அனைத்து துப்புரவு பணியாளர்கள் பங்கேற்பார்கள் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவு

சென்னை அரசு திரைப்பட நிறுவனம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுப்பு!