கும்மிடிப்பூண்டியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆண்டு விழா

கும்மிடிப்பூண்டி: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு மாதர்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கண்மணி பிரியா தலைமை தாங்கினார், உதவி தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்றார். ஆண்டறிக்கையை ஆசிரியர் யுவராணி வாசித்தார்.

கூட்டத்தில் மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ், பாதிரிவேடு ஊராட்சி தலைவர் மூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் பவானி, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாக இயக்குனர் அசோக்குமார் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இதனை தொடர்ந்து, கல்வியில் சிறந்த மாணவிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கூட்ட முடிவில் பட்டதாரி ஆசிரியர் கோவிந்து நன்றியுரை வழங்கினர்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு