கூகுள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர் பணி நீக்கம்

சான் பிரான்சிஸ்கோ: கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகியவை எதிர்காலத்தில் 12,000 பேரை, அதாவது 6% ஊழியர்களை நீக்க இருப்பதாக கடந்தாண்டு அறிவித்திருந்தன. இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர், வாய்ஸ் அசிஸ்டென்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முதலீட்டாளர்களை ஈர்க்க கடந்தாண்டு 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 187% வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்