தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.480 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று 2வது நாளாக சரிவை சந்தித்தது. அதே நேரத்தில் பல மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.45 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,200க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,665க்கும், சவரன் ரூ.45,320க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,625க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.45,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 2வது நாளாக தங்கம் விலை குறைந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,605க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,840க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.480 குறைந்தது. அதே நேரத்தில் பல மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.45 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Related posts

பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் காயம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது

மே 7 முதல் உதகையில் இ-பாஸ் நடைமுறை அமல்