மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு குறைந்து  ரூ.86.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவெனஅதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது.

நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி