வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தாலி கண்டுபிடிப்பு

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் சங்கு வளையல்கள், புகை பிடிப்பான் கருவி, சுடுமண் பானை, பாசிமணிகள் உள்ளிட்ட 3,300க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது 40 சதவீதம் மட்டுமே தங்கம் கலக்கப்பட்ட தாலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத் தாலி 56 மில்லிகிராம் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அமித்ஷா நாளை மதுரை வருகை

தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்