தங்கம் சவரன் ரூ.50,000ஐ நெருங்கியது

சென்னை: தங்கம் கடந்த 18ம் தேதி ஒரு சவரன் ரூ.48,720க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,080க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,140க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.49,120க்கும் விற்கப்பட்டது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,235க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாளில் சவரன் ரூ.1160 உயர்ந்துள்ளது. சவரன் ரூ.50ஆயிரத்தை நெருங்கியது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி