ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,200 விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்சம் என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,665க்கும், சவரன் ரூ.45,320க்கும் விற்கப்பட்டது. நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,625க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.45,000த்துக்கும் விற்கப்பட்டது.

Related posts

டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சி முற்றுகை

மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம்; 3 நாட்கள் செல்ல வனத்துறை தடை விதிப்பு!

வந்தவாசி, உதகை உள்ளிட்ட கிராமங்களில் மிதமான மழை!