தங்கம் விலை தொடர் சரிவு

சென்னை: தங்கம் விலை கடந்த 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தை தொட்டது. மறுநாள் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,880க்கு விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.54,880க்கு விற்பனையாது. நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.

தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை வீழ்ச்சியை சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.6,650க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில், தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 வரை குறைந்துள்ளது. ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு