தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்ந்த நிலையில் நேற்று சவரனுக்கு ₹200 குறைந்தது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி ஒரு சவரன் ₹46,200க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், 24ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹45,320க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.

அதாவது, 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது.
இந்நிலையில், 29ம் தேதி தங்கம் சவரனுக்கு ₹40 குறைந்து ஒரு சவரன் ₹44,760க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹560 குறைந்தது. இது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தது. 30ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு சவரன் ₹44,760க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ₹50 உயர்ந்து ஒரு கிராம் ₹5,645க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ஒரு சவரன் ₹45,160க்கும் விற்கப்பட்டது.

இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது. நேற்று கிராமுக்கு ₹25 குறைந்து ஒரு கிராம் ₹5,620க்கும், சவரனுக்கு ₹200 குறைந்து ஒரு சவரன் ₹44,960க்கும் விற்கப்பட்டது.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்