மருத்துவர் பத்திரிநாத் இழப்பு மருத்துவ உலகிற்கு பேரிழப்பு: ஜி.கே.வாசன் இரங்கல்

சென்னை: மருத்துவர் பத்ரிநாத் மறைவுக்கு ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சங்கர நேத்ராலயா நிறுவனரும், தலைவருமான டாக்டர். பத்திரிநாத் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். பத்திரிநாத் அவர்களால் 1978ம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்ட சங்கர நேத்ராலாய நிறுவனம் லாப நோக்கு இல்லாத கண் மருத்தவமனையாக மக்களுக்கு பணியாற்றி லட்சகணக்கானவர்களின் பார்வையை திறனை மேன்படுத்திய மருத்துவனை. அதிநவின உபகரணங்களுடன், புதிய தொழில் நுட்பத்துடன் பல்வேறு நகரங்களில் மருத்துவனைகளை நிறுவி மக்கள் பயனுற சேவையாற்றும் மருத்துவனையாக தரம் உயர்த்தியவர்.

அனைத்து தர மக்களுக்கும் பார்வையை அளிக்கும் கலங்கரை விளக்கமாக விளங்கி வரும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டினாலும், பத்திரிநாத் அவர்களின் வழிகாட்டுதலாலும் சேவையாற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. பத்திரிநாத் அவர்களின் சேவையை பாராட்டி மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருதுகளும் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது என்று பல்வேறு விருதுகளை பெற்றவர். இவ்விருதுகள் அவரின் கடின உழைப்பிற்கும், அர்பணிப்பு உணர்விற்கும், சேவை மனப்பான்மைக்கும் அளித்த அங்கிகாரம் ஆகும்.

ஜி.கே. மூப்பனார் அவர்களோடு நட்பு கலந்து அன்போடு பழகியவர். சிறந்த பண்பாளர். பத்திரிநாத் அவர்களின் இழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்களுது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், சங்கர நேத்ராலயா மருத்துவமைனயின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஜி.கே.வாசன் பத்திரிநாத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்