சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியரின் கணவருக்கு 5 ஆண்டு சிறை..!!

ஈரோடு: ஈரோட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியரின் கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சிறுமிகள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபரில் தனது மனைவி நடத்தும் டியூசனுக்கு வந்த சிறுமிக்கு சுபாஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஈரோடு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைதுசெய்தனர். வழக்கின் விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். சுபாஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை. ரூ.3,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related posts

பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்