2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ‘கேலோ இந்தியா’ போட்டி: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: ‘கேலோ இந்தியா-2023ம் ஆண்டிற்கான போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்’ என்ற முதல்வரின் கோரிக்கையை ஏற்றுகொண்ட பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வரின் டிவிட்டர் பதிவு: 2023ம் ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இது இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்த ஒரு தளமாக விளங்கும். மேலும், 44வது செஸ் ஒலிம்பியாட்டின்போது அனைவரும் கண்டது போல, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தமிழ்நாடு மிக விமரிசையாக நடத்தி, தமிழ்ப் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் பறைசாற்றும்.

Related posts

ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

தேர்தல் நடைபெறும் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்குதேசம் கட்சியினர் மோதல்!

2024 காலாண்டில் ரூ.175 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக சொமாட்டோ நிறுவனம் அறிவிப்பு