திருத்தணி சட்டமன்ற அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம்: அமைச்சர், எம்பி திறந்து வைத்தனர்


திருத்தணி: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி, ம.பொ.சி. சாலையில் உள்ள திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலவச இ-சேவை மையத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில்,  டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, அமைச்சர் சா‌.மு.நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியின் போது எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரிஷப், திருத்தணி தாசில்தார் விஜயராணி, மாநில நிர்வாகிகள் ஆதிசேஷன், நாகலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன், மிதுன் சக்கரவர்த்தி, நகர செயலாளர் வினோத்குமார் ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், ஆர்த்தி ரவி, கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அகூர்மாணிக்கம், கணேசன், ஜோதி நகர் ஆறுமுகம், முஸ்தபா, சுரேஷ், இளைஞர் அணி கிரண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது

மே-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்