Food spot

தியாகராய நகர் சென்னையின் ரொம்ப பீக்கான பகுதிகளில் ஒன்று. அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் இந்தப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வண்டிக்கடைகளும், ரெஸ்டாரண்ட்டுகளும், ஹோட்டல்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலான உணவகங்களில் தென்மாவட்ட ஸ்டைலில் ஆத்தன்டிக் ஃபுட் கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தது. இந்தக்குறையைப் போக்கும் வகையில் தென்மாவட்ட மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடிய பச்சை மிளகாய் சிக்கன் இங்கு கிடைக்கிறது. தியாகராய நகரில் அமைந்துள்ள பசும்பொன் என்ற உணவகத்தில்தான் இந்த பச்சை மிளகாய் சிக்கன் கிடைக்கிறது.

பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா போன்ற மசாலா பொருட்கள் எதுவும் சேர்க்காமல் முழுக்க முழுக்க உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் மட்டுமே வைத்து இந்த டிஷ்ஷை இவர்கள் தயார் செய்து கொடுக்கிறார்கள். தென்மாவட்ட ஸ்டைலில் மற்ற உணவுகளைச் சாப்பிடுவதற்கும் இது ஒரு நல்ல ஸ்பாட்.சென்னையில் திரும்பும் பக்கமெல்லாம் உணவகங்கள் இருந்தாலும் வீட்டு முறை உணவுகளுக்கு கொஞ்சம் அலையத்தான் வேண்டி இருக்கும். அப்படியே, வீட்டு செய்முறை உணவகங்கள் காணக் கிடைத்தாலும், அங்கு கிடைக்கும் உணவுகள் ஆரோக்கியமாக இருக்குமா? என்ற கேள்வியும் நிச்சயம் எழும்.

பொதுவாகவே அசைவம் சமைப்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. கலப்படம் நிறைந்த பொருட்களையும், பெயர் தெரியாத சாஸ்களையும் ஊற்றி அசைவத்தை சமைப்பவர்களுக்கு மத்தியில், வீட்டில் அம்மா ஆட்டி வைத்த மசாலாவில் கோழிக்குழம்பு, மட்டன் குழம்பு மற்றும் சிக்கன் லெக் பீஸ் சுவைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு வளசரவாக்கத்தில் இருக்கும் வளசை பாய் மெஸ் நல்ல சாய்ஸ். இங்கு கிடைக்கும் மேற்கண்ட அயிட்டங்கள் வேற லெவலில் இருக்கும்.ஆவியில் வேக வைத்த உணவுகள் உடல்நலத்திற்கு உகந்தது என உணவு நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அத்தகைய சத்து நிறைந்த உணவு என்றால் சாட்சாத் புட்டுதான். புட்டு வகைகளில் இன்று புதிதாக வந்துவிட்டன. ஆனால் பாரம்பரிய முறையில் கேழ்வரகு, தினை உள்ளிட்ட சத்துகள் நிரம்பிய சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்டு வெரைட்டியான புட்டு வேண்டும் என நினைப்பவர்கள் விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள புட்டுக்கடைக்கு செல்லலாம். இங்கு சுடச்சுட கிடைக்கும் புட்டு வகைகளும், கடலைக்கறி உள்ளிட்ட சைட் டிஷ்களும் டேஸ்ட்டி வித் ஹெல்த்தி ரகம்தான்.

Related posts

மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு!!

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்

சென்னை பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை!!