மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.314 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.314 கோடி செலவில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம், முதுநகரில் ரூ.100 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், சி.புதுப்பேட்டையில் உள்ள மீன் இறங்குதளத்தில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், மீன் உலர்தளம் மற்றும் சாலை வசதி, லால்பேட்டை அரசு மீன்பண்ணையில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சினைமீன் குளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், கடலூரில் ரூ.5 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம் மற்றும் பயிற்சி மையக் கட்டிடம்.

மேலும், ராமநாதபுரம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் ரூ.314 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரம் செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை செயலாளர் கார்த்திக், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்