முத்தான 3 ஆண்டுகள்


தமிழகத்தில் திமுக அரசு கடந்த 7.5.2021ல் ஆட்சி பொறுப்பேற்றது. கடும் பொருளாதார நெருக்கடியில் ஆட்சிக்கு வந்த போதும், அவற்றை எல்லாம் சமாளித்து 3 ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் மக்கள் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்ததுமே பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச விடியல் பயணத்திட்டம் கையெழுத்தானது. இந்த அரிய சேவை மூலம் சுமார் 450 கோடிக்கும் மேலான பயணங்கள், கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது. இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு சுமார் ₹800 முதல் ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பாகிறது.

பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என்ற சட்டத்தை கொண்டு வந்த திமுக அரசு, அவர்கள் யார் கையையும் எதிர்பாராமல் வாழ வேண்டுமென்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம் ஒரு பெண் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ₹12 ஆயிரம் வரை உரிமைத்தொகையாக பெறுகிறார். பெண்கள் தங்களுக்கான செலவுகளுக்கு யார் கையையும் எதிர்பாராமல் வாழ வேண்டும் என்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கனவு திட்டங்களுள் இதுவும் ஒன்று. மாதந்தோறும் சுமார் 1.15 கோடி பெண்கள் இத்தொகையினை பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தை தற்போது கர்நாடகா அரசும் அமல்படுத்தியுள்ளது. ெதாடர்ந்து பிற மாநிலங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் அறிக்கையாகவும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த பெண்கள், கல்லூரி படிப்பை தொடர்வதற்காக மாதம் ₹1,000 உதவித்தொகையாக வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மாணவிகளை தொடர்ந்து மாணவர்களுக்கும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இதன்மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. மேலும், மதிய உணவு அரசு பள்ளிகளில் வழங்கி வந்த நிலையில், காலை உணவுத்திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இதன்மூலம் ஏழ்மையான சூழலில் பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள், பலரும் ஆர்வமுடன் கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர். இத்திட்டம் தொடங்கியதையடுத்து அரசுப்பள்ளிகளில் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 31,000 அரசுப்பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைகின்றனர். கனடா அரசும் இத்திட்டத்தை தங்கள் நாட்டில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதுமட்டுமா…? கல்வி நலனோடு மக்களின் உடல் நலனையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1.70 கோடி பேர் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்பு, ₹1,501 கோடியில் கிராம சாலைகள் மேம்பாடு, ₹4,818 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி, ₹5,996.53 கோடி கோயில் நிலங்கள் மீட்பு, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு என திமுக அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே ேபாகலாம். தொடர்ந்து முதலீட்டாளர்கள் மாநாடை நடத்தி பல லட்சம் கோடி முதலீடுகளையும் ஈர்த்து, பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி, இந்தியாவிலேயே ஏற்றுமதி துறையிலும் சாதித்து, தமிழகத்திற்கு பிரகாசமான விடியலை தந்துள்ளது திராவிட மாடல் அரசு.

Related posts

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது