பட்டாசு வெடித்ததில் சென்னையில் 111 இடங்களில் தீ விபத்து

சென்னை: பட்டாசு வெடித்ததில் சென்னையில் மட்டும் 111 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். பட்டாசுகள் வெடித்ததால் நேற்று மட்டும் சென்னையில் 111 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள குடோன், பெரியமேடு பகுதியில் உள்ள கடை, கொளத்தூர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு, மயிலாப்பூர் சாய்பாபா கோயில் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன.

இந்த விபத்துகளில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்து உள்ள தீயணைப்புத் துறை, விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்து உள்ளது. அதே போல் தமிழகம் முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடங்களில் 700 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 111 இடங்களில் நிகழ்ந்த தீ விபத்துகளில் 38 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழ்நாடு கிக் பாக்சிங் வீரர், வீராங்கனைகளுக்கு டிடிவி.தினகரன் பாராட்டு

பால்வளத்துறையில் ஆவின் புதிய புரட்சி 3 ஆண்டுகளில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி: நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.57 சதவீதம்

தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து; ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கினர்