உத்திரமேரூர் அருகே தீ தொண்டு வார ஒத்திகை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே தனியார் கல்லூரியில் தீ தொண்டு வார ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு வழிமுறையில் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உத்திரமேரூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பில், உத்திரமேருர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு, ஒத்திகை பயிற்சி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று உத்திரமேரூர் அருகே பருத்திக்கொள்ளை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், உத்திரமேரூர் தீயணைப்பு நிலையம் அலுவலர் ஏழுமலை தலைமையில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு தீயிணை பாதுகாப்பாக அணைக்கும் வழிமுறைகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்கள், ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மணிப்பூர் தாக்குதல் துரதிஷ்டவசமானது, கடும் கண்டனத்திற்குரியது: முதலமைச்சர் பிரேன்சிங்

ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்த குழு, பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 24 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு